நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்

நாட்டில் மேலும் 237 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 78 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 96,186 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் 303 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 92,611 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 2,960 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 237 பேரில் 78 பேர் வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 23 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 21 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 20 பேர், கொழும்பு மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 18 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 13 பேர் , கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 09 பேர், கம்பஹா மாவட்டத்தில் 08 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 07 பேர், கேகாலை மாவட்டத்தில் 05 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 03 பேர் ,மொனராகலை மாவட்டத்தில் 02 பேர், காலி, அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: