நெடுந்துார பேருந்து சேவை - இன்று முதல் சிவில் உடையில் காவற்துறை உத்தியோத்தர்கள் கடமையில்


வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் 7 பேர் பலியாகியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்விபத்துக்களில் பெரும்பாலானவை உந்துருளி விபத்துக்கள் எனவும்,ஏப்ரல் மாதம் 10ம் திகதி முதல் 20ம் திகதி வரையிலான காலப்பகுதியானது நாட்டினுள் அதிகளவான வாகன விபத்துக்களை பதிவு செய்த காலப்பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பேருந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று முதல் சிவில் உடையில் காவற்துறை உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக அதிக வேகம், போக்குவரத்தின் போது கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தல் மற்றும் ஏனைய வீதி போக்குவரத்து விதிகளை மீறுகின்றமை உள்ளிட்ட விடயங்களை அந்த உத்தியோகத்தர்கள்  கண்காணிக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு சாரதி ஒருவர் தவறு இழைப்பானாரால் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments