இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,52,879 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 839 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளதாகவும் 11,08,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 90,584 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 1.21 கோடி பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,இந்த நிலையில் நாடு முழுவதும் இதுவரை 10.15 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,20,81,443 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: