உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - இன்றுடன் இரண்டு வருடங்கள்


ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  21ம் திகதி நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம்,மட்டக்களப்பு சியோன் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம் என்பவற்றிலும்,ஷெங்ரிலா,கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேகைஷட் உள்ளிட்ட விருந்தகங்கிலும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டடோர் பலியானதோடு அதிகளவானோர் காயமடைந்தனர்.

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று காலை 8.45 க்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

No comments: