நடிகர் செந்திலுக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியில் திரையுலகம்நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இன்று வரை செந்தில் - கவுண்டமணி காம்போவுக்கு இணை யாருமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் இருவரும்

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் செந்தில் அரசியலிலும் தீவிரமாக உள்ளார். அதிமுகவில் இருந்த நடிகர் செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரத்தில் செந்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

நடிகர் செந்தில், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் செந்தில் தனது குடும்பத்தினருடன் சிகிச்சை பெற்று வருகிறார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது

No comments: