மேல் மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதியின் பின்னர் மேல் மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், கடந்த ஜனவரி மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதன்படி, மேலதிக வகுப்புக்களுக்கு கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 100 க்கு மேற்படாதிருத்தல் வேண்டும். இது அனைத்து மேலதிக வகுப்புகளுக்கும் பொருந்தும் என்பதுடன் அனைத்து வகுப்புக்களிலும் சமூக இடைவெளியைப் பேண வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இருக்கை வசதி 100 ஐ விட குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மாணவர்களின் எண்ணிக்கை, இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments