நாட்டின் இன்றைய வானிலை


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இன்று மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டில் பிற பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன் வடதிசை நோக்கி பயணிப்பதன் காரணமாக ஏப்ரல் மாதம் 5ம் திகதியிலிருந்து 14ம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments