திருக்கோவில் பிரதேசத்தில் முதலைப்பிடிக்கு இலக்காகிய நபரின் சடலம் இன்று மீட்பு


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  இத்திக்குளம் பகுதியில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ள சம்பவம் நேற்றைய தினம்  இடம்பெற்றுள்ளது . 

குடிநிலம் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய  4 பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து மேகநாதன் என்பவரே இவ்வாறு முதலை இழுத்து சென்று காணாமல் போயுள்ளார் என திருக்கோவில் பொலிஸ்வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் இவரின் உடலை தேடும்,பணியில்,பொலிஸ்சார்,மற்றும் மீனவர்கள் மற்றும்,கடல்படையினர்கள் இணைந்து,மேற்கொண்டு வந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments