பேக்கரி தயாரிப்பு உற்பத்தியாளர்களுக்கு பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய விசேட அனுமதி


பேக்கரி தயாரிப்பு உற்பத்தியாளர்கள் பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான விசேட அனுமதி வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்படாத எண்ணெய் இறக்குமதி காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தடை காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கடுமையாக பாதிப்பினை எதிர்கொள்வதாக வலியுறுத்தி வந்த நிலையில் இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுளளது.

Post a Comment

0 Comments