இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 793 பேர்  கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கொவிட் - 19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 25 இலட்சத்து 87 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் ஒரு கோடியே 16 இலட்சத்து 79 ஆயிரத்து 958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 7 இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 477 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments