திருக்கோவில் பொலிஸ்பிரிவில் மோட்டார்சைக்கிள் மூலம் மதுபான போத்தல்கள் கடத்தியவர் கைது.!!!

ஜே.கே.யதுர்ஷன்


அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவிலிற்கு மோட்டர் சைக்கிளில் மதுபானம் கடத்தி வந்த மதுபான வியாபாரி ஒருவரை நேற்று முன்தினம் (6) செவ்வாய்க்கிழமை தம்பிலுவில் பிரதான வீதியில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன் 75 போத்தல் மதுபானங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளினையும்  கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான நேற்று முன்தினம் (6) பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான வீதி போக்குவரத்து பிரிவு மற்றும் பொலிசார் இணைந்து தம்பிலுவில் பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த நிலையிலே இக்கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்வட்டாரம் தெரிவித்துள்ளது. 

மேலும்,கைதானவர்,அக்கரைபற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Post a Comment

0 Comments