வார இறுதி முடக்கமா....?


நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களில் நாட்டினை முடக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டினை முடக்கினால் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார தரப்பினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக வார இறுதி நாட்களான நாளை(சனிக்கிழமை) முதல் திங்கட்கிழமை வரையாக தொடர்ச்சியாக மூன்று விடுமுறை நாட்கள் வரவுள்ளன.

இதனால் அதிகளவானவர்கள் கொழும்பிலிருந்து தங்களது ஊர்களுக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இது ஆபத்தான நிலையினை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில் இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது வார இறுதி முடக்கநிலை குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: