உகந்தை முருகன் ஆலயமும் வன-விலங்கு எச்சங்களின் காப்பகமும்


உகந்தை முருகன் ஆலயம்

உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் இலங்கையில்  புகழ் பெற்ற முருகன் ஆலயங்களுள்  முக்கியமான தலமாகும்
குன்றம் எறிந்த குமரவேள், அவுணர்குல மன்னனை அழித்த பின்னர் எறிந்த வேலானது ஆறு பொறிகளாகியது. 
அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கியது என்பது வரலாறு முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் (உகந்தை) பெற்றது என நாம் கருத்தில் கொள்ளலாம்  ஈழத்து (இலங்கை) ஆறுபடைவீடுகளான திருப்படைகோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.

மேலும் முருகனின் ஈழத்து அறுபடை வீடுகளுள் முக்கியமான யாத்திரை தலமாக கணிக்கப்படும் கதிர்காம பாதயாத்திரையில் ஆரம்பமாக உகந்தை திருத்தலம் காணப்படுகின்றமை ஆலயத்தினை மேலும் சிறப்பிக்கின்றது.


கதிர்காம பாதயாத்திரை ஆரம்பிக்கும் போது பக்தர்கள் வெள்ளம் போல் திரண்டு உகந்தை ஆலயம் முழுவதுமாக வீற்றிருப்பர் ஆரோகரா சத்தத்துடன் காவியுடையுடன் கழுத்தில் உருத்திராக்க மாலை அணிந்திருப்பதுடன் பாதயாத்திரையின் போது தங்கள் உபயோகிக்கும் ஆடை அணிகலன்களை மூட்டைகளாக கட்டி வைத்திருப்பர்.

அவர்களது பாவச்சுமைகளாக அவற்றை கருதி கதிர்காம முருகனிடம் தங்களது பாவங்களை மன்னிக்க கோருவது பாதயாத்திரை செல்பவர்களது வரலாற்று ஜதீகம்.

உகந்தை முருகன் ஆலய தரவுப்படங்கள்
பாதயாத்திரை காட்டுவழியாக ஆரம்பிக்கின்றபோது பாதயாத்திரையின் ஆரம்பமாக குமண யானைகள் சரணாயலம் காணப்படுகின்றது.

 உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சரணாலய ஆரம்ப வாயில் அமைந்துள்ளது கபிலித்தை நோக்கிய பணியப்பவர்களின் ஆரம்ப வாயிலாகவும் இது சிறப்பு பெற்றுள்ளது.

குமண தேசிய பூங்கா 

காட்டுவழியூடாக பாதயாத்திரை செல்பவர்கள் குமண தேசிய பூங்கா பிரதான வாயில் பகுதியில் அமைந்துள்ள விலங்குகளின் எச்சங்களை பாதுகாத்து வைத்துள்ள காப்பகத்தினை தாண்டாமல் செல்ல முடியாது.

காட்டு வழிப்பாதை ஆரம்ப நுளைவாயில்


குறித்த காப்பகத்தின் காப்பாளர்களாக முப்படையினர் செயற்படுவதுடன் வல இலாக பிரிவினரும் செயற்படுவர்.


காப்பகத்தில் காணப்படும் விலங்குகளின் எச்சங்களில் இலங்கைக்கு உரித்தான விலங்குள் காணப்பட்டாலும் ஒரு சில விலங்குளின் எச்சங்கள் வேறு நாட்டிற்கு உரித்தானவையாக காணப்படுகின்றமை இங்குள்ள சிறப்பம்சமாக காணப்படுகின்றது.

எச்சங்கள் மிகப்பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்பட்டு கோர்க்கப்பட்டு அழகு படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குமண தேசிய சரணாலயத்தின் வரைபுப்படமும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மிகச் சிறப்பான முறையில் விலங்குகளின் புகைப்படங்கள் பாதுகாப்புடன் காணப்படுவதுடன் விலங்குகளின் எச்சங்கள்  கோர்க்கப்பட்டு நேர்த்தியான முறையில் பராமரிக்கப்பட்டு சிதைவடையாமல் இருக்க அதன் மேல் (பொளிஸ்) செய்யப்பட்டு மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காப்பகத்தினை பார்வையிட சிறயளவு தொகை நாம் செலுத்த வேண்டும் .விலங்குளின் கீச்சொலியின் மத்தியில் ரம்மியமான சூழலின் மத்தியல் குறித்த காப்பகம் அமைந்திருப்பது அதன் அமைவிட முக்கியத்துவத்தினை பறைசாற்றுகின்றது.

குமண தேசிய சரணாலயத்தை ஊடறுத்துச் செல்லும் பாதயாத்திரை குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மாத்திரம் பாதயாத்திரியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

பதயாத்திரை செல்லாதவர்களுக்கு சரணாலய வனப்பகுதிக்குள் உள்நுளைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பணம் செலுத்தி பாதுகாப்பாளருடன் அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் சரணாலயத்தை வலம் வரும் செயற்பாடும் இங்கு காணப்படுகின்றது.


கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு (2020) பாதயாத்திரை தடைப்பட்டதுடன் இவ் வருடம் அனுமதி கிடைக்குமா என்பது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.No comments: