முகக்கவசம் ஆணியாதவரா நீங்கள் ? கொரோனா பரவ நீங்களே காரணம்.



முகக் கவசம் அணியும் நடைமுறை மிகக் கடுமையாக பின்பற்றப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

கடந்த சிங்கள தமிழ் புதுவருட சமயத்தில் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் ஒழுங்காக கடைப்பிடிக்காததன் காரணமாகவே தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்து, மக்கள் ஒன்று கூடும் இடங்கள், வர்த்தக நிலையங்கள், பணிபுரியும் இடம் ஆகியவற்றில் முகக் கவசங்களை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த வருடம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய முகக் கவசம் அணியும் விதிமுறையை முழுமையாக பின்பற்ற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

No comments: