இலங்கை நாமத்தை சிங்கலே என மாற்றவேண்டும் - பௌத்த மதகுருமார் வேண்டுகோள்

 


நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என பௌத்தமதகுருமார் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.

புதிய அரசமைப்பிற்கான  யோசனைகளை சமர்ப்பித்துள்ள பௌத்தமதகுருமார்கள் குழுவொன்று நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பௌத்தமதகுரு ஒருவர் நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிங்களமே உத்தியோகபூர்வ மொழியாக காணப்படவேண்டும், ருகுணு பிஹிட்டி மாயா என்ற அடிப்படையில் பிரதேசங்கள் பிரிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments