கொரோனா தொற்று - அதிகரித்து வரும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை


நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹிரிவடுன்ன மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பதுடன், 63 மற்றும் 83 வயதுடைய ஆண்களே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 604ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 99 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95,719 ஆக உயர்ந்துள்ளது.

ஷஇதேவேளை கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தொற்றில் இருந்து மேலும் 225 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92,151 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், தொற்றுக்குள்ளான 2,966 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: