படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் புறப்பட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!


'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கியுள்ள  இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். கொரோனா பரவலால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பை கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் மீண்டும் துவங்கினார்கள்.

இதற்கிடையில்  'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து அங்கு 3 வாரங்கள் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments