இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன


ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கிறிஸ் மோரிஸ் 2 சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் முதல் போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. மேலும் அணியின் பந்து வீச்சாளர்கள் காலதாமதமாக ஓவர்கள் வீசியதால் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

முதல் போட்டி என்பதால் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. இதேபோல் இன்று ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பந்து வீச அதிகநேரம் எடுத்துக்கொண்டால் அணியின் கேப்டன் தோனி இரண்டு லீக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியிலாவது வெற்றிபெறவேண்டும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு. இதனை நிறைவேற்றுவார்களா என்பதை இன்று மாலை நடைபெறவுள்ள போட்டியின் ஆட்டம்தான் முடிவுச் செய்யும்.

No comments: