நகரசபையில் பெண் உறுப்பினர்களுக்கிடையில் கைகலப்பு பெண் கைது !மஹரகம நகரசபை பெண் உறுப்பினர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த நகர சபையின் மற்றுமொரு பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் உறுப்பினரை நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான உறுப்பினர் தற்போது ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: