பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அறிவிப்பு


பண்டிகைக் காலத்தில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் மக்களுக்காக பொலிஸார் விசேட ஆலோசனைக் கோவையொன்றை வௌியிட்டுள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் செல்லும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் பணம் மற்றும் கைப்பைகள் தொடர்பில் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

விசேடமாக ரயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தங்காபரண கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் போன்ற தொடர்ச்சியாக பதிவாகும் குற்றச்செயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments