பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது - இராணுவ தளபதி


பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் சவேந்திர சில்வா கூறியுள்ளார்..

அதன் பிரகாரம் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments