பொகவந்தலாவ பகுதியில் ஆர்ப்பாட்டம் ; தொழிலாளர்களுக்கிடையில் அமைதியின்மை...!

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் பொகவந்தலாவ லொய்னோன், நோத்கோ, லின்போட், ஆகிய தோட்டப்பகுதியில் உள்ள தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ  பச்சை தேயிலை கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றது.

அதனால் லொய்னோன் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக தொழிலாளர்களினால் இன்று (22) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலையில் இருந்து 11.00 மணிவரை குறித்த தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள்  கருத்து தெரிவிக்கையில்,

எமது தோட்டத்தில் உள்ள தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ தேயிலை கொழுந்தினை பறிக்குமாறு ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளதாகவும்,நேற்றய தினம் கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்  தோட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதேவேளை குறித்த கூட்டத்திற்கு தோட்ட தலைவர்மார்கள், தலைவிமார்கள் கலந்து கொண்டதாகவும் அங்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவ்வாறு கூறவில்லையெனவும் தோட்ட நிர்வாகம் பொய்யான பிரச்சாரங்களை மக்கள்  மத்தியில் கொண்டு வருவதாக குற்றம் சுமத்தி இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு முன்பு தாம் நாள் ஒன்றுக்கு 15 கிலோ கொழுந்து பறித்து வந்ததாகவும் அதற்கு மேல் மேலதிகமாக தேயிலை  கொழுந்தினை பறிக்க வேண்டாமென நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின் போது எமக்கு அறிவிக்கப்பட்டது. 

இருந்த போதிலும், தோட்ட தொழிலாளர்கள் அனைவரிடமும் கலந்து அலோசித்த பின்னரே இதற்கான முடிவினை தாம் முன்னெடுப்பபோம் என நாங்கள் அறிவித்துள்ளோம். 

எம்மை நாள் ஒன்றுக்கு 18 கிலோ தேயிலை கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்துகிறது. எம்மால் மேலதிகமாக 03 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க முடியாது என தொழிலாளர்கள்  தெரிவித்தனர்.

ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு தோட்ட முகாமையாளரை வருமாறு வழியுலுத்திய போதும் அவ்விடத்திற்கு முகாமையாளர் வருகை தராமையினால் தொழிலாளர்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: