மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம்


தற்போதைய சூழ்நிலையில், பாடசாலைகளில் வகுப்புகளை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால்  மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என  ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதுடன்  பாடத்திட்டங்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என  ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

அத்துடன்  கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையிலும், பாடசாலைகளை நடாத்த தீர்மானித்துள்ள அரசாங்கம் முகக் கவசம் மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், வகுப்புகளை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என, ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

 மேலும், பாடத்திட்டங்களை உரிய முறையில் நிறைவு செய்வதற்கு தேவையான வழிகாட்டல்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


No comments: