வாகன விபத்துக்களில் 75 பேர் உயிரிழப்பு


நாட்டில் கடந்த 8 நாட்கள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 75 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் வாகனம் செலுத்திய 03 பேர் மற்றும் பாதசாரி கள் 03 வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன் படி கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து இன்றையதினம் வரை 75 பேர் உயிரிழந்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை மதுபோதை மற்றும் பொறுப்பற்ற ரீதியில் வாகனம் செலுத்துவோரை அடையாளம் காண பொலிஸார் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் , இது தொடர்பாக வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் அவதானத்துடன் இருப்பதுடன் , வீதி ஒழுங்குகளை கடை ப்பிடிக்குமாறும் அஜித் ரோகண கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: