யாழில் ரூபா 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கிவைப்பு


யாழில் ரூ. 5ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக சுமார் 148,178 பேர் வரை தெரிவு செய்யபட்டு இதுவரை ஏறத்தாள 50% பயனாளிகளுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

ஏறக்குறைய மூன்று மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ. 5000/- இன்று தொடங்கி வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏழு வகையான குடும்பங்களுக்கு இக் கட்டணம் செலுத்தப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

1) சமூர்த்தி பயனாளி குடும்பங்கள்

2) குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்

3) மூத்த குடிமக்களின் கொடுப்பனவைப் பெறும் குடும்பங்கள்

4) மாற்றுதிறனாளிகள் கொண்ட குடும்பங்கள்

5) சிறுநீரக நோயாளிகள் கொண்ட குடும்பங்கள்

6) 100 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்

7) ஆறு பிரிவுகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பித்து தகுதி பெற்றவர்கள்.No comments: