5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பம்


புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவேறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 18 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments