நடிகர் மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று

 நடிகர் மாதவனின் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் மாதவன். ரொமான்ஸ் மட்டுமின்றி என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு, இங்கிலிஷ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் மாதவனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுஇந்நிலையில் நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவனின் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கொரோனா

 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாதவனின் குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாதவன் நடிப்பில் கடைசியாக மாறா திரைப்படம் வெளியானது. தொடர்ந்து ராக்கெட்ரி படத்தில் நடித்து வந்தார் மாதவன். ராக்கெட்ரி படத்தை நடிகர் மாதவனே இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று முன்தினம் வெளியானது

Post a Comment

0 Comments