இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது


இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு வருகிறது.

அவ்வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இரண்டு லட்சத்து 739 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல ஒரே நாளில் ஆயிரத்து 38 பேர் பலியானதை அடுத்து இதுகாறும் கொரோனாவால் 1 லட்சத்து 73 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 93 ஆயிரத்து 528 பேர் குணமடைந்ததை அடுத்து 1.24 கோடியே 29 ஆயிரத்து 564 பேர் குணமடைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், 14 லட்சத்து 71 ஆயிரத்து 877 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 11 கோடியே 44 லட்சத்து 93 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: