இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் இதுவரை 1,45,26,609 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,23,354 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,26,71,220 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

மேலும் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் 1,75,649 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: