2021 சித்திரை மாத ராசி பலன்கள் - தனுசு ராசி


தனுசு ராசி அன்பர்களே!

ஓரளவுக்கு சாதகமான மாதம். பணவரவு போதுமான அளவுக்கு இருக்கும். செலவுகளும் குறைவாகவே இருப்பதால் கடன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது என்பது ஆறுதலான விஷயம். 

அந்நியர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. 

சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தாலும் சாதகமாக முடியும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் பிறருக்குக் கொடுத்து வராது என்று விட்டுவிட்ட கடன் தொகை கிடைப்பது மகிழ்ச்சி தரும். 

வீடு மாறும் எண்ணம் இருந்தால்,அதற்கான முயற்சியை மாதப் பிற்பகுதியில் மேற்கொள்வது சாதகமாக முடியும். மாத முற்பகுதியில் தாய்மாமன் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் கூடுமானவரை அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், நல்ல வளார்ச்சியும், பணவரவும் இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம். அரசாங்க வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு குடும்பத்தோடு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். புகுந்த வீட்டினரின் அன்பும் ஆதரவும் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். பிள்ளைகள் அனுசரணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: ஏப்ரல் 15, 16, 17, 18, 24, 25, 26, 27 மே 1, 2, 5, 6, 7, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 2, 8

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 19 மாலை முதல் 20, 21

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றுவதும், ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வழிபடுவதும் நன்மை தரும்.

No comments: