2021 சித்திரை மாத ராசி பலன்கள் - விருச்சிக ராசி


விருச்சிக ராசி அன்பர்களே!

பொருளாதார வசதி திருப்திகரமாக உள்ளது. எதிர்பாராத பல நன்மைகள் நடைபெறும். காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்குவதுடன் புதிய முயற்சிகளும் அனுகூலமாக முடியும். செல்வாக்கு அதிகரிக்கும்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படும். 

தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நி யோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

பூர்வீகச் சொத்துப் பிரச்சனையில் பொறுமை அவசியம். சிலருக்கு விடுபட்டுப் போன குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வீடு மாறும் முயற்சியை இந்த மாதம் தவிர்த்துவிடவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் மாதப் பிற்பகுதியில் சிறப்பான பலன்களைக் காணலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பாராதபடி லாபம் அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். சக வியாபாரி களால் ஏற்பட்ட போட்டிகள் குறையும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனுகூலமாக இருப்பர். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: ஏப்ரல் 14, 15, 16, 22, 23, 24, 25 மே 3, 4, 5, 10, 11, 12

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 17, 18, 19 மாலை வரை மற்றும் மே 14

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்தி மலரால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபட பிரச்னைகள் குறையும்.

No comments: