கொரோனா அச்சம் : 2021 ஐபிஎல் - சிஎஸ்கேவில் யாரெல்லாம் வெளியேற வாய்ப்பு..?


2021 ஐபிஎல் தொடரில் கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பலர் வரிசையாக வெளியேறி வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலர் வரிசையாக தொடரை புறக்கணித்து வெளியேறுகிறார்கள். முக்கியமாக ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் தாயகம் திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.

ராஜஸ்தான், பெங்களூர், டெல்லி என்று பல அணிகளில் இருக்கும் வீரர்கள் இதுவரை தொடரில் இருந்தே "அவுட்டாகி" உள்ளனர். மேலும் பல வீரர்கள் வரும் நாட்களில் வெளியேற வாய்ப்புள்ளது.

அதன்படி பெங்களூர் அணியில் இருந்து கேன் ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா வெளியேறி உள்ளார். டெல்லி அணியில் இருந்து அஸ்வின் வெளியேறி உள்ளார். ராஜஸ்தான் அணியில் இருந்து ஆண்ட்ரு டை வெளியேறி உள்ளார்.

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இதேபோல் யாராவது வெளியேறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கேவில் பல முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட எல்லோருமே 35 வயதை தாண்டியவர்கள்.

இதில் மிட்சல் சான்ட்னர், பெஹன்டிராப் போன்ற வாய்ப்பு கிடைக்காத வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இம்ரான் தாஹிர் போன்ற வயதான வீரர்களும் தொடரில் நீடிப்பார்களா அல்லது பாதுகாப்பு கருதி சொந்த ஊர் செல்வார்களா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

தற்போது சிஎஸ்கே அணியில் பிராவோ, டு பிளசிஸ், மொயின் அலி, இம்ரான் தாஹிர், லுங்கி நிகிடி, மிட்சல் சான்டனர் ஆகியோர் முக்கியமான வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர். 

இவர்கள் தொடரில் நீடிக்கும் முடிவை எடுப்பார்களா அல்லது பாதியில் வெளியேறுவார்களா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. இன்னொரு பக்கம் தோனியின் பெற்றோருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை சிஎஸ்கே அணியில் யாரும் வெளியேறும் முடிவை எடுக்கவில்லை என்று தகவல்கள் வருகின்றன. தொடரில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் சிஎஸ்கே வீரர்கள் யாரும் இல்லை. பல வீரர்கள் ரிட்டயர் ஆன வீரர்கள் என்பதால்.. இந்தியாவில் தங்கி இருப்பதில் அவர்களுக்கு சிக்கல் இல்லை, அதேபோல் ஆஸி வீரர்கள் பெரிதாக சிஎஸ்கேவில் இல்லை என்பதால், சிஎஸ்கேவில் இருந்து பெரிதாக யாரும் வெளியேற வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

No comments: