அதிசார பெயர்ச்சி 2021- குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் மிக அதிர்ஷ்டசாலிகளாக இருப்பீர்கள்!


அதிசார பெயர்ச்சியாக ஏப்ரல் 5ம் தேதி இரவு 12.43 மணிக்கு மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி, மீண்டும் செப்டம்பர் 13ம் தேதி மகர ராசிக்கு திரும்புவார்.

பொதுவாக குரு பகவான் சஞ்சரிக்கக்கூடிய ராசியிலிருந்து 3, 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு கெடுபலன்களைத் தரக்கூடியவராக இருப்பார்.

இந்த 5 மாத காலத்தில் எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.

மேஷ ராசி

இதுவரை என் குருவின் நான்காம் பார்வையாக இருந்த நிலையில் தற்போது மூன்றாம் இடத்திற்கு வருவதால் பணப் பரிமாற்றத்தின் கவனமாக இருக்க வேண்டும், குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் சுபகாரிய முயற்சிகளில் கவனமாக இருப்பது அவசியம், எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுவது மிகவும் அவசியம்.

சுப காரியத்தில் தடைகள் தடங்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம் பணவிஷயத்தில் கவனமாக இருக்கும் பணம் கொடுப்பதாக இருந்தாலும் வாங்குவதாக இருந்தாலும் கவனித்து செயல்படுவது அவசியம்.

அதேபோல் சொத்து வாங்க கூடிய அமைப்பான வீடு நிலம் வாங்க கூடிய யோகங்கள் இருந்தாலும் அதை கவனமுடன் பார்த்து வாங்குவது அவசியம்.

ஆவணங்களை கவனமாக படித்து பார்த்து வாங்குவது அவசியம். அதேபோல் உத்தியோகஸ்தர்களும் தொழில் செய்பவர்களும் ஆவணங்களை கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம் எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்யவும்.

சக ஊழியர்களுடன் மேலதிகாரிகளைக் குறித்து தேவையற்ற பேச்சு பேச வேண்டாம். அது உங்களுக்கே பிரச்சினையாக அமையலாம். பொறுமையும் முயற்சியும். மேஷ ராசிக்கு தேவைப்படக்கூடிய காலமாக இந்த ஐந்து மாதங்கள் இருக்கும்.

கடக ராசி

கடக ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் இடத்தில் வருவதால் அனைத்து விஷயத்திலும் சற்று கவனமாக செயல்படுவது அவசியம். உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு வேகமாக செயல் படுவதால் எந்த ஒரு செயலிலும் வெற்றியை பெறலாம்.

அலுவலகமோ அல்லது வீடாக இருந்தாலும் உங்கள் பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற பேச்சு உங்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பதோடு, தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் உங்களின் வேலைக்காக கொடுக்கப்பட்ட நேரத்தில் பணியை முடிக்கும் முயல்வது அவசியம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களிடம் வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் உங்களின் லாபம்தான் தேவையற்ற வீண் ஆகும்.

பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் செலவுகளும் அதற்கேற்றாற்போல அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

சுப காரியங்கள் நடக்க தாமதம் ஏற்படலாம். குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உணவு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். இந்த காலத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் அவசியம்.

கன்னி

கன்னி ராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் குரு அமர்ந்து 7ம் பார்வையால் அற்புத பலனை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், குரு 6ம் இடத்திற்கு செல்வதால் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வீடு கட்டுதல், வெளிநாடு முயற்சி போன்ற நீங்கள் செய்துகொண்டிருக்கும் எந்த ஒரு செயலும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல முயல்பவர்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பின்னர் முயற்சியில் இறங்குவது நல்லது.

புதிய தொழில் தொடங்குதல், புதிய கடன் வாங்குதல், ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். புதிய முதலீடு விஷயங்களில் ஈடுபடும் போது தேவையற்ற நஷ்டம், சட்ட சிக்கல், பொருளாதார தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

சொத்து வாங்குதலில் கவனம் தேவை. தேவையற்ற கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். முடிந்த வரை மற்றவர்களிடம் பணம்,பொருள் வாங்குவதை கட்டாயம் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதனால் உங்களுக்கு தேவையற்ற மன உளைச்சல், அவமானம் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உணவில் கட்டுப்பாடும் தேவை.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் அமர்ந்து ராசிக்கு 11ம் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது 12ம் இடமான துலாம் ராசியைப் பார்க்கிறார். விரய ஸ்தானம், அயன, சயன, பயண ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

இதனால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அவசியம். மற்றவர்களுடன் இணைந்து எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம். தனித்து செய்வதால் பல்வேறு வகையில் நற்பலன் உண்டாகும். தொழில் பங்குதாரர் மூலம் சற்று சங்கடங்கள் ஏற்படலாம்.

இவர் நல்லவர், இவர் உதவுவார் என யாரையும் நம்பி அவர்கள் பின்னால் போக வேண்டாம். இருக்கும் இடையில் சற்று முன்னேற்றம் இருக்கும் என்பதால் முடிந்த வரை இப்போது இருக்கும் நிலையிலேயே இருப்பது நல்லது. பதறாத காரியம் சிதறாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு எதிலும் பதற்றம் இல்லாமல் சரியான நகர்வு தேவை.

மகரம்

இதுவரை குரு பகவான் உங்கள் சொந்த வீடான மகர ராசியில் சஞ்சரித்து வந்த நிலையில் தற்போது அதிசார நிலையாக 2ம் இடத்திற்கு செல்வதால் தேவையற்ற விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் வரவு சிறப்பாக இருந்தாலும், அதிகளவில் செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் எந்த ஒரு செலவையும் செய்யும் முன் இந்த செலவும் நமக்கு அவசியம் தானா, தேவையான பொருளைத் தான் வாங்குகிறோமா என சிந்தித்து வாங்குவது நல்லது.

மகர ராசிக்கு அதிசார குரு பெயர்ச்சி தொழில், உத்தியோகத்தில் நிம்மதியும், லாபமும் ஏற்படும்

தேவையற்ற வாக்குறுதிகளைக் கொடுக்காமல் இருப்பது அவசியம். இதை செய்து முடிப்பேன், முடித்துத் தருவேன் என வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம். இதை செய்ய முயல்கிறேன் என எதிர்மறையும் கலந்ததாக, உறுதியற்றதாக கூறுவது நல்லது. ஆன்மிக பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

No comments: