அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் உடன் நடைமுறைக்கு வரும்வகையில் அமுல்

ஜே.கே.யதுர்ஷன்


திருக்கோவில் பிரதேச கொவிட் 19 தடுப்பு செயலணியின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற  தற்போது நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்19 தொற்றில் இருந்து  பாதுகாப்பு,பெறுவது பற்றிய கலந்துரையாடல்  நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் தலைமையில் நேற்றைய தினம் (29) திருக்கோவில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, திருக்கோவில் காஞ்சிரன் குடா 242வது இராணுவ முகாம் இரண்டாவது கட்டளை அதிகாரி ,திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன், திருக்கோவில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் M.அனோஜா ,திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் திரு.கமலராஜன் திருக்கோவில் சாகாம விசேட அதிரடிபடைமுகாம்பொறுப்பதிகாரி மற்றும் திருக்கோவில் வைத்தியசாலை அத்தியட்சகர் திரு .மன்சூர்த், மற்றும் திருக்கோவில் பிரதேச பொதுசுகாதார வைத்திய அதிகாரி Dr.மோகனகாந்தன், திருக்கோவில் பிரதேச சிரேஷ்ர கிராம சேவை உத்தியோர்த்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோர்த்தர்கள் பொது சுகாதார உத்தியோத்தர்கள் ,ஆலய நிறுவாகிகள் ,பொது மக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

அவை

01.கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட,9 அங்கத்தவர்கள் அடங்கிய பிரதேச வழிகாட்டல்,குழு உடனடியாக துரிதமாக செயற்படல் வேண்டும் என்பதுடன் பிரதேச பொதுமக்களுக்கு விரைவாக அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

02.தொண்டர் அடிப்படையில் உள்ள 5பேர் கொண்ட குழுவிற்கு மேலதிகமாக இன்னும் 5 அங்கத்தவர்களை சேர்ந்துக்,கொள்ளலும் அத்துடன் குறித்த 10 அங்கத்தவர்களும் உடனடியாக செயற்பட்டு பிரதேச மட்டத்தில் பெறப்படும் முறைப்பாடுகளை கிராம சேவகருக்கு வழங்க வேண்டும்.

03.வெளிமாவட்டத்தில் இருந்து எமது பிரதேச த்திற்கு வருகை தருவோரை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு வழங்க அறிவுறுத்தல் வேண்டும்

04.நோய் தொற்றின் மூன்றாவது பரவலை தடுக்குமுகமாக MS ,MOH ஆகியோரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக துண்டுப்பிரசுரமொன்றை தயாரிந்து அனைத்து கோயில்களிலும் ஒலிபெருக்கியின் உதவியுடன் மக்களுக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டும்.

05.சுகாதார நடவடிக்கைகளை மீறுவோர் MObil Police மற்றும் முப்படையினரால் கண்காணிக்கப்பட்டு உடனடியாக அவர்களுக்கான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் .

06.ஆலயங்களில் மேலதிக திருவிழாக்கல்,நடாத்துவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது மேலும் அன்றாட நிகழ்வுகளுக்கு 25ற்கு உட்பட்ட நபர்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி கலந்து கொள்,வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

07 . தனியார் வகுப்புக்கள் அறநெறி வகுப்புக்கள் என்பன எதிர்வரும் 2021/05/15 திகதி வரை தடைசெய்யப்பட்டுள்ளது.

08. சுகாதார நடைவடிக்கை ஆனா முகக்கவசம் அணிதல் சமுக இடைவெளி ,கைகழுவுதல் போன்றவற்றை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

09. முகக்கவசம் அணியாமல் முறையானசுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் பொது இடங்களுக்கு  வீதிகளுக்கு செல்வோர் உடனடியாக அவ் இடத்திலே PCR பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள்.

10.வெளிமாவட்டத்திற்கு தொழிலுக்கு செல்வோர் வெளிமாவட்டத்தில்ஷாஇருந்துதொழில்மற்றும் வியாபாரத்திற்கு வருவோர் 72 மணித்தியாலயத்திற்கு,உட்பட்ட காலத்திற்குள் பெறப்பட்ட PCR பத்திரம் இருத்தல் வேண்டும் இல்லாதோர் மீண்டும்  திருப்பி அனுப்பபடுவார்கள்.

ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

No comments: