புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் ; அம்பாறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் - வைத்தியர் எஸ்.அகிலன் MOH


அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 9 புதிய கொவிட் -19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அந்தவகையில் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 7 பேர் புதிய கொவிட் -19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் எமக்கு தெரிவித்தார்.

மேலும் தற்போதைய காலமானது நோன்பு கடைப்பிக்கப்படுவதால் தொழுகைக்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோமக்கள் வெளியில் செல்லும் போது மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறும் மக்களுக்கு தெரிவிப்பதாக வைத்தியர் எஸ்.அகிலன் குறிப்பிட்டார்.

அத்துடன் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் இருவருமாக மொத்தம் அம்பாறை மாவட்டத்தில் 09 புதிய கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: