18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது சென்னை


கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது .

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 15வது லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுவாஜ் 42 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மொயின்அலி 12 பந்துகளில் 25 ரன்களும், கேப்டன் தோனி 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

டு பிளிஸ்சிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 95 ரன்களும், கடைசி பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்ஸருக்கு பந்தை பறக்கவிட்டு அசத்தினார். இதனையடுத்து சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 221 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியின் முன்கள வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரஸல், தினேஷ் கார்த்திக் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்களும், ரஸல் 22 பந்துகளில் 54 ரன்களை குவித்தனர். பேட் கம்மின்ஸ் தனி ஒருவனாக போராடி 34 பந்துகளில் 66 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து 19.1ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது.

இப்போட்டியில் சென்னை அணியில் ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் குவித்த டு பிளிஸ்சிஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது.

No comments: