136 மில்லியன் ரூபா பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட ஒருவர் கைது


சந்தேகத்திற்கிடமான முறையில் 136 மில்லியன் ரூபா பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை – தர்மாராம பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிதூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தற்போது வௌிநாடுகளில் வசிக்கும் சிலரால் இவ்வாறு பணம் வைப்பிலிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments