ஐபிஎல் - ஐதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்


14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20-ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150- ரன்கள் எடுத்தது.  மும்பை அணியில் அதிகபட்சமாக டி காக் 40 ரன்களும், பொல்லார்டு 35-ரன்களும் விளாசினர். 

இதையடுத்து,  151- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அபாரமான துவக்கம் பெற்றது. பெர்ஸ்டோ 43 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 36- ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

இதன்பின் எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. 19.4- ஓவர்கள் தாக்குப்பிடித்த ஐதரபாத் அணி  137- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 13- ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதுவரை 3- போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை. 

No comments: