பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதனம் தொடர்பில் வெளியான செய்தி


பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலின் படி தோட்ட நிறுவனங்கள் மார்ச் 5ம் திகதி முதல் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்கு இருப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி  சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயித்து வெளியான வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: