1000 ரூபா சம்பளம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த  கோரிக்கை மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் மே 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments