மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி


நாட்டில் மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து சாதாரண மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 30 வயதிலிருந்து 60 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்காக 4000 மத்திய நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் தொிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 2000 மத்திய நிலையங்களை செயற்படுத்துவதினுாடாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: