மேல் மாகாணத்தில் முன்பள்ளி பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதி


மேல் மாகாணத்தின் கொரோனா பரவும் ஆபத்து அதிகமுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த  ஏனைய பிரதேசங்களில் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மேல் மாகாணத்தின் கொரோனா பரவும் ஆபத்து அதிகமுள்ள பகுதிகள்  தவிர்ந்த ஏனைய  பிரதேசங்களில் உள்ள முன்பள்ளிகள் எதிர்வரும் 15ம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: