இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள்


நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 5.30 வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரையிலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், தொழில் அமைச்சரினால் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் விதிமுறைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: