நாடாளுமன்ற வளாகத்தில் நாளை எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு


நாடாளுமன்ற  வளாகத்தில்  நாளை எழுமாறாக  பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் பங்கேற்குமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

இதன்படி நாளை  முற்பகல் 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை குறித்த பரிசோதனை  நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிககையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: