அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது

எஸ்.அஷ்ரப்கான்  


அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர்,ஒலுவில், பாலமுனை உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் அறுவடைகள்  இடம்பெற்று வருகின்றன. 

கடந்த வாரத்தில் மூன்று தினங்களாக மாவட்டத்தின் கரையோர  பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் நெல் அறுவடை செய்வதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். 

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு போன்ற தாழ்நில வயல் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கிய நிலையில் பெரும் பாதிப்பினை நெல் அறுவடையின் போது விவசாயிகள் எதிர்கொள்வர் என எதிர் பார்க்கப்பட்டது. 

தற்போது நிலமை ஓரளவு சீரானாலும் கொரோனா கால அச்சம் மற்றும் வெள்ளப் பாதிப்பு அதனுடன் இணைந்த இயற்கை அனர்த்த நிலைமையினால் இம்முறை பெரும் சிரமத்துக்கு மத்தியில் விவசாயிகள் நெல் அறுவடையை ஆரம்பித்துள்ளதாகவும், சிறந்த விலை மற்றும் சந்தை நிலைமை ஏற்படும் போது மந்திரமே தாங்கள் செலவு செய்த தொகைகளைத் தாண்டி இம்முறை இலாபமீட்டக் கூடிய நிலை வரும். 

இதற்காக அரசாங்கம் உரிய விலை நிர்ணயம், மானியங்களை எமக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments: