தும்பங்கேணியில் உலக ஈர நில தினம் அனுஸ்டிப்பு

துஜியந்தன்


உலக ஈர நில தினம் தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம் மற்றும் தும்பங்கேணி குளம் ஆகியவற்றில் மரநடுகை திட்டத்தோடு அதிபர் எஸ். இதயராஜா தலைமையில் நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் உல ஈர நில தினம் பெப்ரவரி மாதத்தில் கொண்டாடப்பட்டுவருகின்றது. இவ் வருடம் இத்தினம் ஈரநிலங்களும் நீரும் எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. 

எதிர்கால சந்ததியினருக்கு வளம் மிக்க சுற்றாடல் ஒன்றைக் கையளிப்பதற்கும் வளமான எதிர்காலத்தை நாட்டிற்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் இந் நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.

இங்கு மாணவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றதுடன், விவசாயிகளுக்கான அறிவூட்டல் நிகழ்வும் நடைபெற்றது. இதில் வெல்லாவெளி உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் கலந்து பிரதம அதிதியாக  கொண்டார். 

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் எஸ்.கோகுலன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சசிகுமார், உதவிக்கல்விப் பணிப்பாளர் சுரேஸ், மாவட்ட வனவிலங்கு திணைக்கள உத்தியோகத்தர் சுரேஸ்குமார்,  மாகாணநீர்பாசணத்த்pணைக்களத்தின் நவகரிக்கு பொறுப்பான  பொறியியலாளர் திவாகரன் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.  

No comments: