கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா


கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தபால் பரிமாற்றகத்தை மூடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: