இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் - போத்தலை உடைத்து தாக்கியதில் ஒருவர் பலி


பலாங்கொடை பொலிஸ் பிரிவின் சீதலஹந்திய, வேவெல்வத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு  இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, போத்தல் ஒன்றை உடைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

28 வயதுடைய சீதலஹந்திய, வேவெல்வத்தை, ராஸ்ஸவெல சந்தி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: