பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திலகராஜ்!

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீட உறுப்பினர் வைலட் மேரி, தொழிலாளர் தேசிய முன்னணியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றைய தினம் கூடியது. 

இதன் போது இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் உதவி பொதுச் செயலாளராக கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவியில் முன்னதாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திரசிகாமணி நேற்றைய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது பதவி நீக்கப்பட்டதாக பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: