அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை


மேல் மாகாணத்துக்கு வெளியில் கொரோனா அச்சுறுத்தல் 3 மடங்கு அதிகரித்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

எனினும் அது தொடர்பில் கவனம் செலுத்தாமை காரணமாக தற்போது நாடு முழுவதும் நோயாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், இந்த மாத இறுதியின்போது மிகவும் அபாயமான நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என அந்த சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

No comments: